மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை!

- Advertisement -

அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியில் போக்குவரத்து முற்கொடுப்பனவு கட்டண அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று பணப்பரிமாற்றத்தின் மூலம் பொது மக்களுக்கு பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதனால்  முற்கொடுப்பனவு கட்டண பயண அட்டைகளை அறிமுகப்படுத்துவதை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணையகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்.

அத்துடன் இந்த  முற்கொடுப்பனவு கட்டண அட்டைகளை ரயில் பயணத்தின் போதும் பயன்படுத்த முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முற்கொடுப்பனவு கட்டண அட்டைகள் அறிமுகப்படுத்தப் பட்டதன் பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து சேவைகள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தனியார் பேருந்து சேவைகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் ஊதியத்திற்கு மேலதிகமாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடுமாறும் தேசிய போக்குவரத்து ஆணையகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்து கட்டண அட்டை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் பணிகள் நிறைவடையுமெனவும் தேசிய போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் தெரிவித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்….

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...

பெருந்தோட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான எதிர்காலதிட்டங்கள் குறித்து...

கண்டி பூவெலிக்கடை கட்டட விவகாரம்: உரிமையாளருக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட கண்டி – பூவெலிக்கடை பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி...

முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் வழி!

தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை மனம் உருகி 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நம்பகமிக்க உண்மை. இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி...

கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

தமது கடமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, கிராம உத்தியோகத்தர்களின் சங்கத் தலைவர்...

Developed by: SEOGlitz