கொரோனா தொற்று காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டமானது நாட்டிற்கு வருகைத்தருபவர்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியதொன்றாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெர்வித்துள்ளது.
நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகைத்தந்த அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்த மறுத்திருந்திருந்மைதொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்த நலையலயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயளாலர் வைத்தியர் நவின் டி சொய்சா இதனை தெர்வித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை அனைவரும் கடுமையான முறையில் கடைப்பிடிப்பது அவசியம் என்று சொய்சா தெர்வித்துள்ளார்.
இதேவேளை இலங்கையுடன் தொடர்புடைய இராஜதந்திரிகள் இலங்கையில் உள்நுழையும் போது கொரோனா தொற்று பரிசோதனை குறித்து கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிக்கையை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது