மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச ஊழியர்கள் அடுத்த வாரம் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் : உள்ளுராட்சி அமைச்சு!

- Advertisement -

அரச ஊழியர்கள் சகலரும் அடுத்த வாரம் தொடக்கம் பணியிடங்களுக்கு  அழைக்கப்படுவார்கள் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ரட்ணசிரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான  இறுதித் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அரச ஊழியர்களில் மூன்றில் ஒருபகுதியினர் மாத்திரமே பணியிடங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து சேவை வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு  தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி  முதல் ரயில் மற்றும் பேரூந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விராத் கோஹ்லியின் தலைமையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இந்தியக் குழாம் அறிவிப்பு

விராத் கோஹ்லியின் தலைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,   இதில் ரோஹித் ஷர்மா,சு ப்மன் கில்,மயான்க் அகர்வால், அஜின்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட்  ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக...

அதிபர் ஆசிரியர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   இம் முறை உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை...

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குவதே சிறந்த தீர்வு – ஐ.தே.க

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேசிய முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தேவையான அஸ்ட்ரா செனகா கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய...

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளது-எஸ் எம் மரிக்கார் 

அரசாங்கம் ஆட்சிப் பொறுபேற்று இன்று பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்  அவர் இதனைக் கூறியுள்ளார் அவர் மேலும்...

Developed by: SEOGlitz