அமெரிக்க பொலிஸ் காவலில் ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd உயிரிழந்த சம்பவத்தை எதிர்த்து இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், George Floyd மரணத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அமெரிக்க பொலிஸாரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் Kentucky மாகாணத்தில் பொலிஸார் மற்றும் தேசிய படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் சுமார் 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஊரடங்கு உத்தரவை மீறி அமெரிக்கா முழுவதும் மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.