மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் எட்டாவது நாளாக தொடர்ந்தும் போராட்டம்!

- Advertisement -

அமெரிக்காவில் பொலிஸார் மற்றும் படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கறுப்பினத்தவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ள போராட்டம் எட்டாவது நாளான இன்றும் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அமெரிக்காவில் சுமார் 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது..
இந்தப் போராட்டங்கள் பல இடங்களில் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.

இந்த நிலையில், Kentucky மாகாணத்தில் பொலிஸார் மற்றும் தேசிய காவலர் படையினர் நடத்திய துப்பாக்கி ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்க பொலிஸ் காவலில் உயிரிழந்த ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக George Floyd மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பொலிஸாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் George Floyd கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முன்னணி நடிகர்களிடையில் நேரடி மோதல்..?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம் வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக...

7 விக்கெட்டுக்களால் வெற்றியை தன்வசப்படுத்திய பங்களாதேஷ் அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148...

Pfizer நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த இத்தாலி!

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மட்டுப்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் Pfizer நிறுவனத்திடம் இருந்து 600 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனினும், Pfizer நிறுவனத்திடம் இருந்து...

இன்று இடம்பெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில்  நாண சுழற்சியில் வெற்றி  பெற்று முதல் இனிங்ஸில் துடுப்படுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய...

நாட்டில் சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாள மேலும் 438 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 860...

Developed by: SEOGlitz