நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா நகரில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உருவச்சிலை வைப்பதற்கான பிரேரணை நுவரெலியா பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபையின் மாதந்த அமர்வின் போதே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சபையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலுயோகராஜ் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நானுஓயா நகரில் சிலை ஒன்றை வைக்க வேண்டுமென்ற பிரேரணையை சபையில் முன்வைத்துள்ளார்.
இந்தப் பிரேரணையை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.