எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக சமர்ப்புக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தல் திகதி எதிர்வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று தெரிவித்தது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக தேர்தலை நடாத்துவது தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வருவதோடு, தேர்தல் தொடர்பான சட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.