மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் பலத்த காற்றுடனான வானிலை : மின்சாரம் துண்டிப்பு!

- Advertisement -

கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களில் வீசிய பலத்த காற்றின் காரணமாக அப்பகுதிகளில் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாலைமரம் ஒன்று முறிந்து வீழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல கிராமங்களிற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்று பகல் 1.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினாலேயே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதனால் மின்சாரசபை மற்றும் ரெலிகொம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான கம்பங்களிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், வட்டக்கச்சி, இராமநாதபுரம், திருவையாறு, பன்னங்கண்டி உள்ளிட்ட பல கிராமங்களிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பிரதேச மக்கள் இணைந்து குறித்த மரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கில் பலத்த காற்றுடனான வானிலை : மின்சாரம் துண்டிப்பு! 1

இதேவேளை வவுனியாவில் வீசிய பலத்த காற்றின் காரணமாக புகையிரத நிலைய வீதியில் வீதியோரத்தில் நின்ற பழமை வாய்ந்த மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததில் அப்பகுதியின் சில பிரதேசங்களுக்கான மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனினும் குறித்த அனர்த்தம் காரணமாக எவ்வித பொருட்சேதங்களே அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை.

இதனையடுத்து முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்றும் பணியில் அப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் பலத்த காற்றுடனான வானிலை : மின்சாரம் துண்டிப்பு! 2 வடக்கில் பலத்த காற்றுடனான வானிலை : மின்சாரம் துண்டிப்பு! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ராஜிதவின் பிணை மனுவை வேறு நிதிமன்றத்துக்கு மாற்றுமாறு உத்தவு!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய,  குறித்த பிணை மனுவை...

க.பொ.த. உயர்தரப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் நடத்தப்படுமா?

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த...

கட்டாரிலிருந்து 235 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கைப் பிரஜைகள் 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, அவர்கள் கட்டாரின் தோஹா நகரிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL - 218 எனும்...

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணிவரையான ஆறு மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...