மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்று நாட்டின் காலநிலையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்- பல பகுதிகளுக்கும் எச்சரிக்கை

- Advertisement -

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்கமானது சூறாவளியாக வலுவடையுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கு அம்பன் சூறாவளி  என தாய்வான் நாடு பெயரிட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த அம்பன் சூறாவளி அடுத்துவரும் நாட்களில் வங்காளவிரிகுடாவின் வடக்கு திசையில் பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்கமானது மேலும் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தாழமுக்கமானது வடமேற்கு திசைநோக்கி நகரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் இதன் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு   மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

அத்துடன் காற்றின் வேகமானது  40 தொடக்கம் 50 கிலோமீற்றர்  ஆக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவுவேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  தெற்கு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன், சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தொடர்ந்து வரும் அதிக மழையுடனான வானிலைக் காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, குருணாகலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின், நாகொட, பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியகம மற்றும் போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர்பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட,கிரியெல்ல, அஹங்கம, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர,புலத்சிங்கல, வலல்லவிட்ட, ஹொரன, இங்கிரிய மற்றும் மதுகம ஆகிய  பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொலஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க  பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரனியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள்முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனும், அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும்அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருவதன் காரணமாக  ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்குறிப்பிடக்கட்டுள்ளது.

இதன்படி, தெதுரு ஓயாவினை அண்மித்துள்ள, மஹவ, வாரியபொல, நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர, பிங்கிரிய, பல்லம, ஆராச்சிக்கட்டுவ மற்றும் சிலாபம்உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அத்தனகல்ல ஓயாவின், திவுலுப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, கம்பஹா, ஜா – எல்ல, மஹர, கடான மினுவாங்கொட மற்றும் வத்தளைஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களனி கங்கையை அண்மித்த பிரதேசங்களான ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, சீதாவாக்க, கடுவெல, பியகம, ஹோமகம, கொலன்னாவ மற்றும் கொழும்பு ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுககப்பட்டுள்ளது.

அத்துடன்,களுகங்கையை அண்டிய, பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, எலப்பாத்த, கிரியெல்ல, அபேகம, எஹெலியகொட, இங்கிரிய, ஹொரன, கலவான, பாலிந்த நுவர, புலத்சிங்கல, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, மதுராவெல போன்ற பிரதேச செயலாளர்பிரிவுகளுக்கும் இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது

இதேபோன்று, கின் கங்கையின், நெலுவ, தவலம, நாகொட, எல்பிட்டிய, நியாகம, பத்தேகம, வெலிப்பிட்டிய, திவிதுர, காலி உள்ளிட்ட பிரதேச செயலாளர்பிரிவுகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதாக அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நில்வளா கங்கையினை அண்மித்த கொடபொல,பிடபெத்தர, அகுரஸ்ஸ, அதுரெலிய, கம்புறுபிட்டிய, திககொட மற்றும் மாத்தறை ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலை அனுமதிக்குத் தடை? : அமைச்சர் பந்துல!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Developed by: SEOGlitz