மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..முழு விபரம் உள்ளே..!

- Advertisement -

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க பிரதேசமானது இன்றைய தினத்தில் மிகவிரைவாக தீவிரமடையுமென  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்கமானது சக்திமிக்க சூறாவளியாக மாற்றமடையுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்குறியுள்ளது.

- Advertisement -

இந்த விடயம் தொடர்பான தகவல்களை தருகின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின்.

நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..முழு விபரம் உள்ளே..! 1

மேலும், அம்பன் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது நாளை மற்றும் எதிர்வரும் திங்கட் கிழமைகளில் இந்தியாவின் ஒடிசா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நிலப்பரப்பை கடக்குமெனவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், எதிர்வரும் திங்கள் கிழமை இந்த சூறாவளியின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்குமெனவும் எதிர்வுக் கூறப்பட்டு.ள்ளது.

இதேவேளை, குறித்த தாழமுக்க நிலைக்காரணமாக இலங்கையின் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..முழு விபரம் உள்ளே..! 2

இதேவேளை, அடுத்துவரும் 24 மணித்தியாளங்களுக்கு நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..முழு விபரம் உள்ளே..! 3

 

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு

நாட்டில் தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலைக்காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலையான செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர்பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகலை மாவட்டத்தின் பொல்கஹாவெல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோர பிரதேசசெயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின், நாகொட, பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியகம மற்றும் போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர்பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட,  அஹங்கம ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர,புலத்சிங்கல, வலல்லவிட்ட, ஹொரண, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய  பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க  பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்ட மற்றும் தெரனியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின், கங்கஹல கோரல மற்றும் தும்பன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..முழு விபரம் உள்ளே..! 4
சில பிரதேசங்களுக்கு வெள்ள அபாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனிகங்கை, களுகங்கை, அத்தனகளு ஓயா, மஹா ஓயா ஆகியவற்றின்  நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, களனி கங்கையை அண்மித்துள்ள ஹொலோம்புவ, கொலன்கோர்ஸ் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுகங்கையினை அண்மித்த மில்லகந்த பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மஹா ஓயாவினை அண்மித்துள்ள, கிரியுள்ள மற்றும் படல்கம ஆகிய பகுதிகளுக்கும், அத்தனகலு ஓயாவினை அண்மித்துள்ள துனாமலே பிரதேச செயலாளர் பிரிவுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..முழு விபரம் உள்ளே..! 5
மண்மேடு சரிந்து ஒருவர் உயிரிழப்பு

சீறரற்ற வானிலைக்காரணமாக நான்கு மாவட்டங்களில் 30 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு.ள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை, கண்டி, ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த மாவட்டங்களில் 30 குடும்பங்களை சேர்ந்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு.ள்ளனர்.

இதேவேளை, கேகாலை – கிரியுள்ள பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட மரதகொல்ல பகுதியில் 30 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹா ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக குறித்த 30 குடும்பங்களும் நேற்று மாலை முதல் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி, 30  குடும்பங்களை சேர்ந்த 120 பேர் பாதுகாப்பாக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கேகாலை  இம்புல்தெனிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில்  குறித்த வீட்டிலிருந்த ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில், அவரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட்ருந்த்.

இந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 48 வயதுடைய நபரொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 349 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz