நாட்டில் தொடர்ந்தும் பெய்துவரும் மழையுடனான வானிலைக்காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோர பிரதேசசெயலாளர் பிரிவுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள்முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.