மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடுத்துவரும் நாட்களில் இலங்கைக்கு பாரிய எச்சரிக்கை…!

- Advertisement -

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் வளிமண்டள தாழமுக்கமானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலையானது நாளைய தினம் முதல் தென் வங்காள விரிகுடாவின் கடற்பிரதேசத்தில் சூறாவளியாக வலுவடையும் வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், குறித்த சூறாவளி அடுத்துவரும் நாட்களில் வங்காள விரிகுடாவின் வடக்கு திசையில் பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களின் ஆழமாக மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

மேலும், காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோ மீற்றர்வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும், இதன்போது கடல் சற்று கொந்தளிப்பாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே கடற்றொழிலுக்கு சென்றவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டும் அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்ட ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிரதேசங்களில் கடலலையானது உயர்வடைந்து காணப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் கடலலை நிலபரப்பிற்குள் ஊடுறுவும் நிலையும் காணப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து.

இதேவேளை, மேல், சப்ரகமுவ தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

இதனால், மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் மற்றும் வெள்ளம், மின்னல் தாக்கம், மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

குப்பைகளை கொண்டு மின்சக்தி தயாரிக்கும் விசேட திட்டம்!

உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக நாள்தோரும் சேகரிக்கபடும், குப்பைகளை கொண்டு மின்சக்தி தயாரிக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, எரியூட்டக்கூடிய குப்பைகளை பயன்படுத்தி இந்த திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்க்பட்டுள்ளதாக மேல்மாகாண கழிவு மேலான்மை அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பு...

மேல்மாகாண பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீள திறப்பது குறித்த தீர்மானம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இன்று இதற்கான தீர்மானம் மிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும்,...

கொழும்பில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 130 தொற்றாளர்கள் அடையாளம்!

கொழும்பு மாவட்டத்தில் மேலும் 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்றைய நாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாக பகுதியாக கொழும்பு காணப்படுகின்றது. கொழும்பு மாவட்த்தில், நாரயேன்பிட்டிய பகுதியில் 26 பேரும், மருதானை பகுதியில்...

பங்களாதேஷ் – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத்...

கொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே…!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 669 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியகொடை கொரோனா...

Developed by: SEOGlitz