- Advertisement -
வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் தவறி விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.
வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப் பகுதியில் விளையாட சென்ற 7 வயதான அலிகான் சிமியோன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை சிதம்பரபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.