மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக அனுமதி : விண்ணப்பம் உறுதிப்படுத்தும் கால எல்லை நீடிப்பு!

- Advertisement -

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நன்மை கருதி, விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கு மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முன்னதாக, கடந்த 20 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த தினங்களில் தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்ளாத மாணவர்கள், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு பாடசாலையிலும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை அதிபர் அல்லது பிரதி அதிபர் சான்றுப்படுத்தவேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன…!

நாட்டில் மேலும் சில பகுதிகளில்  இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல்  தளர்த்தப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி  கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு  கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட  கல்முனை 1 C...

பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை

சாதாரணதர  மாணவர்களின் கல்விசெயற்பாடுகளுக்காக  மேல் மாகாணத்தில் இன்று முதல்  பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா   அதிபர் தெரிவித்துள்ளார். பாடசாலை வாகனசேவைகளில்...

ரயில்சேவைகள் இன்றுமுதல் வழமையான முறையில்…

கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்ட ரயில்சேவைகள்  இன்றுமுதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 390  ரயில்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ...

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்…!

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை...

மேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

Developed by: SEOGlitz