மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவரத்து அனுமதி பத்திரங்களை மீள பெற்றுக்கொடுக்க நடவடிக்கை…!

- Advertisement -

மணல், மண் மற்றும் சரளைகற்கள் என்பனவற்றை கொண்டுசெல்லும் செயற்பாடுகளுக்கான அனுமதிகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போக்குவரத்து அனுமதி பத்திரங்களை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும், போக்குவரத்து அனுமதிகளை பெற்றுக்கொடுக்கும் போது சுகாதார நடைமுறைகளான சமூக இடைவெளி உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்காக பணியகத்திற்கு வரும் நபர்களுக்கு, தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடர்பாடல் மையம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 0777 57 48 87 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்பட்டுத்துவதன் ஊடாக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்: ஜனாதிபதிக்கு கடிதம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,  ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில பத்தரிகையொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. இதற்கமைய....

Developed by: SEOGlitz