மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்பெயினில் ஜீலை மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

- Advertisement -

சுற்றுலா  பயணிகள்  ஜூலை முதலாம் திகதி முதல்  முன்பதிவு செய்ய முடியுமென ஸ்பைன் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, இவ்வாறு விடுமுறைக்காக முன்பதி செய்யும் சுற்றுலா பயணிகள் இரண்டு வார காலத்திற்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஸ்பெயினின் சுற்றுலாத்துறை பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக ஸ்பைன் தற்போது  தனது நாட்டின் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையை தளர்த்தியுள்ளது.

இதேவேளை,  கோடை விடுமுறைக்கு முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் ஜூலை மாதத்தில் ஸ்பெயினுக்கு வருவதற்கு திட்டமிட முடியுமெனவும் ஸ்பெயின் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்!

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம்...

இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் : நான்காம் நாள் ஆட்டம்..

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny கைது!

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny, கடந்த ஆண்டு விஷத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை...

இரத்தினபுரி வைத்தியசாலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள்  இருவர் உட்பட  நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நிர்வாக பிரிவினரிடம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார...

கொரோனா வைரஸ் அச்சம் : மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடல்!

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக  ஹொரனை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள  மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  இங்கிரிய...

Developed by: SEOGlitz