மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக கூறிய செய்தி – மஹிந்தவின் உருக்கமான பதிவு…!

- Advertisement -

பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

தான் உயிரிழப்பதற்கு முன்னதாக பிரதமர் மறிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றபோது, தனது அனுதாப செய்தியை வெளியிடும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

மலையகத்தில் தற்போது எழுச்சிக்காக போராடும் இளைஞர்களுக்கு முன்னோடியாக இருந்த ஒரு சிறந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எப்போதும் தனது மக்களை விட்டுக்கொடுக்காத ஒரு தலைவரான ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு ஒரு பாரிய இழப்பு எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman க்கு எதிராக அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டி...

கொரோனா தொற்றின் அச்சம்: பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட...

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன்படி, குறைந்த பட்சம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...

Developed by: SEOGlitz