களுகங்கை, களனி கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்குறிப்பிடக்கட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
களுகங்கையை அண்மித்துள்ள இரத்தினபுரி, எல்லகாவ, மில்லகந்த ,படுபொல, போன்ற பிரதேச செயலாளர்பிரிவுகளுக்கும் இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது
அத்துடன் களனி கங்கையை அண்மித்துள்ள கித்துல்கல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கின் கங்கையை அண்மித்துள்ள தவலம, பத்தேகம,பிட்டபெத்தர, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மஹா ஓயாவினை அண்மித்துள்ள, கிரியுள்ள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அத்தனகலு ஓயாவினை அண்மித்துள்ள பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது