பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் கொண்டுவந்த போர்வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்தமையானது நாட்டின் சுதந்திரம், ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றின் அபிலாஷைகளின் அடையாளமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடைந்த நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வலுவான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், மற்றும் வெளி உலகத்துடன் இணைவது போன்ற இலக்குகளை அடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்