மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு அபிவிருத்திக்கான சிறந்த தலைமைத்துவத்தினைக் கொண்டுள்ளது : பிரதமர்!

- Advertisement -

நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்குப் பொருத்தமான தலைமைத்துவத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொண்டிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இலங்கையர்கள் அனைவரும் ஒருமித்து கொரோனா வைரஸ் தாக்கத்தினை எதிர்கொண்டதன் காரணமாக குறித்த தொற்று நோயினை வெற்றி கொண்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்த காலத்தில் சரிவடைந்திருந்த பொருளாதாரத்தினை முன்கொண்டு செல்வதற்கு அன்றைய எமது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

தற்போதைய நிலையில் முக்கிய விடயமாக வேலைவாய்ப்புக் குறித்து நாம் அதிக கவனத்தினைச் செலுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம் எனவும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் தற்போது கவனம் செலுத்துவது பயனற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் உலக நாடுகள் அனைத்தும் தற்போது கொரோனா தாக்கத்தினால் பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டிருப்பதால் இவ்வாறான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் குறித்த சந்தர்ப்பங்கள் சாத்தியப்படாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

கொவிட் 19 தாக்கத்தின் பின்னர் உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதாரத் தாக்க விளைவுகள் ஏற்பட இருக்கின்றன. எனவே அனைத்துத் துறைகளையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டியது அவசியமானதொன்றாக அமைவதாகக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு வளமான நாட்டினை வழங்கவேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz