பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் கோவில் பிரதம தர்மகர்த்தாவும், பிரபல சமூக சேவையாளருமான சிதம்பரம் சுப்பிரமணியம் செட்டியார் ஜே.பி. இன்று காலை தனது 95 ஆவது வயதில் காலமானார்.
1926 மே மாதம் 9 ஆம் திகதி பிறந்த சுப்பிரமணியம் செட்டியார், பழைய கதிரேசன், புதிய கதிரேசன் கோவில் பிரதம தர்ம கர்த்தாவாக கடந்த 20 வருடகாலமாக கடமையாற்றி வந்துள்ளார்.
சமூக சேவையிலும் அதிகளவுக்கு ஆர்வம் கொண்டுள்ள இவர், திருக்கேதீஸ்வரம் கோவில் தர்மகர்த்தாவாகவும், இந்து காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்து பெரும் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாருடைய இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்கிழமை காலை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெறும் அன்னாரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.