மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனித உரிமை செயற்பாட்டாளரின் நாய் சுட்டுக்கொலை – வழக்கு விசாரணை இன்று

- Advertisement -

நீர்கொழும்பு பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாயொன்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும் , காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாந்துவின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் ‘மெக்ஸ்’ (MAX) என்று செல்லமாக அழைக்கப்படும் நாய் 7-5-2020 காலை ஆறு மணியளவில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டது.

- Advertisement -

குறித்த சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து  விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விசாரணைகளின் போது சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அன்று மாலை சந்தேக நபரான ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் கிளமன்ட் பெர்னாந்து கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பிரிட்டோ பெர்னாந்து சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அசான் பெர்னாந்து முன்னிலையானார்

இதேவேளை சம்பவ இடத்திலிருந்து பித்தளை உலோகத் துண்டொன்றை கண்டெடுத்ததாகவும் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை எனவும் , மேலும் நாயின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனவும் நீர்கொழும்பு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் 22 அம் திகதி வழக்கு சம்பந்தமான முழு அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாயின் கொலை வழக்கு தொடர்பாக குரல் கொடுக்கும் மிருகங்களை பாதுகாக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக சட்டத்தரணி அசான் பெர்னாந்து
தெரிவித்துள்ளார்

இதனையடுத்து குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக அசான் பெர்னாந்து
தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அசான் பெர்னாந்து இதனை தெரிவித்துள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 349 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz