அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை புதிய திட்டங்களை வகுத்துள்ளது.
இதற்கமைவாக அந்தந்த நிறுவனங்களுக்கு தனித்தனியாக பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை முதல் அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பணியாளர்களுக்காக குறித்த நிறுவன பிரதானியிடமிருந்து கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டிருந்தால் மாத்திரமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரயில்களில் பணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும் எனவும், குறித்த SMS தகவலை பாதுகாப்பு பிரிவினரிடம் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது