மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபாகரனின் கனவுகளை மெய்ப்பிக்க வடக்கில் அரசியல்வாதிகள் முயற்சி.

- Advertisement -

உயிரிழந்த பிரபாகரனின்  கனவுகளை மெய்ப்பிக்க வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் முயல்வதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் உப தலைவர் மது மாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்,

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்,

- Advertisement -

ஆயிரக்கணக்கில் மக்களை கொன்றொழித்த தமிழீழ விடுதலைப்புலிகள் தவறிழைத்தவர்கள் அல்ல என சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் அது ஒரு போராட்டம் என அவர் கூறியுள்ளார்,வட்டுக்கோட்டை உடன்படிக்கைக்கு அமைய போராட்டத்தை பிரபாகரன் ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்,இது ஒரு கீழ்த்தரமான கருத்து,தற்போது நாடே கொரோனா குறித்த பார்வையிலிருக்கும் போது இனவாதிகள் தற்போது இனவாதத்தை தமிழர்களின் மத்தியில் பரப்ப ஆரம்பித்துள்ளனர்,உயிரிழந்த பிரபாகரனின் கனவுகளை உயிர்ப்பிக்க முயலும் அரசியல்வாதிகள் வடக்கிலும் தெற்கிலும் உள்ளனர்,அத்துடன் முஸ்லிம் இனவாதியான சஹ்ரானின் கனவுகளைஉயிர்ப்பிக்க முயலும் அரசியல்வாதிகளும் உள்ளனனர்.இதனால் வட்டுக் கோட்டை உடன்படிக்கைக்கு அமைய பிரபாகரன் விக்னேஸ்வரனுக்கு தம்பியானது போல் ஒலுவில் உடன்படிக்கைக்கு அமைய ஸஹ்ரானும் தம்பியாகலாம்,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடுதிரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

இந்த வருடத்துக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டு விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே...

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் : ஜனாதிபதி தெரிவிப்பு!

ஒவ்வொரு பாடசாலைக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பராமரிக்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின்...

இந்தியன் பிரீமியர் லீக் : Kings XI Punjab மற்றும் Mumbai Indians இன்று பலப்பரீட்சை!

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி, அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி,  இந்தப் போட்டியில் Kings...

Developed by: SEOGlitz