கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜூம்மா மஸ்ஜீத் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் வழங்கலின் போது கடும் சன நெரிசல் ஏற்ப்பட்டது.
இந்த சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, மேலும், 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நிவாரணம் வழங்கல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஆறு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.