மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ன நடக்கின்றது இலங்கையில் – சுமார் 44 ஆயிரம் பேர் கைது..!

- Advertisement -

ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் சுமார் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல், நேற்று இரவு வரையான காலப்பகுதியிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அத்துடன், 11 ஆயிரத்து 460 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலையில் கொழும்பில் தங்கியிருந்த 370 பேர், தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் கர்ப்பிணி பெண்கள், நீண்ட கால நோயாளிகள் மற்றும் சிறு குழந்தைகளும் உள்ளடங்கியிருந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, 23 மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் பேலியகொடை விஜய குமாரதுங்க அரங்கிலிருந்து, தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நுவரெலியா  நகரின் சுற்றுலா தளங்கள் மூடல் 

நுவரெலியா  நகரின் சுற்றுலா தளங்கள்  அனைத்தும்   உடன் அமுலாகும் வகையில்   மூடப்பட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட செயலாளர்  தெரிவித்துள்ளார. எனவே சுற்றுலாப்பயணிகள குறித்த பகுதிகளுக்குள்  வருகைதருவதை  தவிர்த்து செயற்படுமாறு  கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று...

மேல் மாகாணத்தில் ஊரடங்கு – எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்குத் தீர்மானம்

மேல் மாகாணத்தில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்  வழமைப்போன்று திறக்கப்படும் என இலங்கை  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலியக்  கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி  பொலிஸ்...

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

Developed by: SEOGlitz