கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலை 4.30 தொடக்கம் மாலை 6 மணிவரை பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ள பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் பேரூந்து பயணங்களின் போது பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது அறிவுறுத்தியதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதிவேக நெடுஞ்சாலையூடான பேரூந்து சேவை கொட்டாவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.