மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயிற்சியின்போது மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

- Advertisement -

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

டன்பார் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய புத்திக பிரசாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை செலுத்தும்போது அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியதாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தில் ‘ஒற்றைச் சில்லை பயன்படுத்தி’ மோட்டார் சைக்கிள் ஓட்டப்பட்டதால் கதவை உடைத்துக்கொண்டு சுவரில் மோதியதாலேயே அதனை ஓட்டிய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பயிற்சியின்போது மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் உயிரிழப்பு! 1 பயிற்சியின்போது மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் உயிரிழப்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz