மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாதாந்த மின்கட்டணப் பட்டியல் தவறாக வழங்கப்பட்டுள்ளது

- Advertisement -

சில மின்பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்கட்டணப் பட்டியலில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஏற்பட்டுள்ள தவறுகளை உடனடியாக திருத்தி, மின்கட்டணப் பட்டியலை மீள வழங்குமாறு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர, மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

சில மின்பாவனையர்களுக்கு தவறுதலாக மின்கட்டணப் பட்டியல் வழங்கபட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகலையடுத்தே, இது தொடர்பில் ஆராயுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், திருத்தப்பட்ட மின்கட்டணப் பட்டியலை, உரிய மின்பாவனையாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எந்தவொரு மேலதிகக் கட்டணங்கள் இன்றியும் மின்கட்டணப் பட்டியலை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விராத் கோஹ்லியின் தலைமையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இந்தியக் குழாம் அறிவிப்பு

விராத் கோஹ்லியின் தலைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,   இதில் ரோஹித் ஷர்மா,சு ப்மன் கில்,மயான்க் அகர்வால், அஜின்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட்  ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக...

அதிபர் ஆசிரியர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   இம் முறை உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை...

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குவதே சிறந்த தீர்வு – ஐ.தே.க

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேசிய முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தேவையான அஸ்ட்ரா செனகா கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய...

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளது-எஸ் எம் மரிக்கார் 

அரசாங்கம் ஆட்சிப் பொறுபேற்று இன்று பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்  அவர் இதனைக் கூறியுள்ளார் அவர் மேலும்...

Developed by: SEOGlitz