மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு மேலும் நிதியுதவி அளிப்பதற்கு இந்தியா இணக்கம்!

- Advertisement -

இலங்கையின் அந்நிய செலாவணி நடவடிக்கைகளில் காணப்படும் பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களுக்காக நிதியுதவி வழங்குமாறு இந்திய அரசிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

சார்க் அமைப்பின் விசேட நெறிமுறைகளின் கீழ் குறித்த நிதியுதவியினை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு உதவ தனிப்பட்ட முறையில் உறுதிபூண்டுள்ளதாகவும், இலங்கைக்கு சாதகமான விதிமுறைகளின் கீழ் உதவ தாம் தயாராக உள்ளதாகவும் இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் நேரடியாக பணியாற்ற ஒரு அதிகாரியை இலங்கை நியமிக்க வேண்டும் என இந்திய பிரதமர் பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் சார்க் உறுப்பு நாடுகளுக்கான நாணய இடமாற்று ஏற்பாடு குறித்த கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது.

இதன் காரணமாக 100 தொடக்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியினை அனைத்து சார்க் உறுப்பு நாடுகளும் பெறும் வகையில் இந்தியா மேற்படி கட்டமைப்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz