மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் ஈழ விடுதலை புலிகள் ஹூலை ஏன் துரத்தினர்?

- Advertisement -

தமிழ் ஈழ விடுதலை புலிகள் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலை தமிழர்களுக்கு மற்றும் இந்துக்களுக்கு எதிரானவர் என்று அறிவித்தது….

அவரது பக்கசார்பு மற்றும் சுயாதீனத்தன்மை இல்லாதது குறித்து இலங்கையில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

அவருடைய செயல் குறித்து நாம் என்ன புரிந்து கொள்ள முடியும்?

புரிந்துகொள்ள வரலாற்றை பாக்கலாம்…

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு 12 ஏப்ரல் 2006 அன்று ரத்னஜீவன் ஹூல் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

https://www.amnesty.org/download/Documents/72000/asa370102006en.pdf

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டதும், துணைவேந்தராக பதவியேற்றால் அவரது உடலை ‘ஒரு பெட்டியில் தலையில்லாமல்’ அனுப்பப் போவதாகக் கூறி தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீண்டும் மீண்டும் மரண அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வெளியிட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தினர் அவரை ‘தமிழ் எதிரி, இந்து விரோதி’ என்றும் ‘தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இல்லை’ என்றும் சுவரொட்டிகளை ஓட்டினார்கள்.

தமிழ் ஈழ விடுதலை புலிகள், நிதர்சனம் இணையதளத்தில் ‘Who is this Fool’ ‘யார் இந்த முட்டாள்’ என்ற தலைப்பில் ஹூலின் புகைப்படத்துடன் கட்டுரைகளை எழுதினார்கள். இது அவரது செயல்களைப் பற்றி எடுத்துச் சொல்கிறது!

ஹூலை அச்சுறுத்தியது யார்? விடுதலை புலிகளின் ஒரு முன்னணி அமைப்பான, மக்கள் எழுச்சி படை, மார்ச் 11, 2006 அன்று ஹூலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டாம் என்றும் மீறினால் ‘ஒரு பெட்டியில் தலையில்லாமல்’ திரும்பி செல்ல வேண்டி வரும் என்றும் எச்சரித்தது.

மார்ச் 12, 2006 அன்று, அவர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரால் தாக்கப்படுவார் என்று அச்சுறுத்தப்படுகிறார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் பல்கலைக்கழக கவுன்சிலின் தலைவர் மாணவர் சங்கத்திடம் இருந்து துணைவேந்தர் தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு கடிதம் வந்தது.

புலிகள் மற்றும் தமிழர்கள் ஹூலை விரும்பவில்லை என்பது வெளிப்படையான உண்மை. அதை மறுக்க முடியாது.

எனவே பேராதெனியவில் வசித்து வந்த இந்த தமிழ் பேராசிரியர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்பட்ட போது, 2 அச்சுறுத்தல்களைப் பெறுகிறார் – ஒன்று விடுதலை புலிகளின் முன்னணியிலிருந்தும், இன்னொன்று தமிழ் மாணவர் சங்கத் தலைவரிடமிருந்தும், இவர் தமிழ் மக்களுக்கு விசுவாசமானவர் இல்லை என்று.

எனவே தமிழர்களும் ஹூலை ‘தமிழ் இனத்திற்கு எதிரானவர்’ என்று கருதுகின்றனர். ஹூல் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் சுவரொட்டிகள் காணப்பட்டன. ஹூல் ஒரு கிறிஸ்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தமிழர்களும் ஹூலை ‘தமிழ் இனத்திற்கு எதிரானவர்’ என்று கருதுகின்றனர். எனவே ஹூல் ‘தமிழ் எதிரி, மற்றும் இந்து விரோதி’ என்று குற்றம் சாட்டப்பட்டது. ஹூல் ஒரு கிறிஸ்தவர். இவை அனைத்தும் தமிழ் மக்களால் அறிவிக்கப்பட்டவை.

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை கண்காணிப்பு மிஷன் (அவர் 2002 போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணித்து வந்தார்) ஆகியோரிடம் அச்சுறுத்தல் தொடர்பில் புகாரளிக்க ஹூல் ஓடினார்.

இந்த அம்னஸ்டி சர்வதேச அமைப்பின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஹூலை ராஜினாமா செய்யுமாறு தமிழ் ஈழ விடுதலை புலிகள் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து அழைப்பு வந்தது. இந்த அறிக்கையில், தமிழ் ஈழ விடுதலை புலிகளுடன் இணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஹூல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கின்றது. இது தமிழ் ஈழ விடுதலை புலிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொடர்பை உறுதிப்படுத்துகிறது (சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் எவ்வாறு சொன்னாலும்).

2020 ஏப்ரல்: ஹூல் இன்று வித்தியாசமான நபராகிவிட்டார்

அவர் இன்னும் ‘தமிழ் எதிரி’, ‘இந்து விரோதி’ ‘தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இல்லை’ என்று கருதப்படுகிறாரா?

தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கு அஞ்சிய மனிதர், ஏப்ரல் 20, 2006 அன்று அமெரிக்கா / கனடாவுக்கு இலங்கையை விட்டு வெளியேறினார். கார்லோ பொன்சேகா மே 2009 இல் தி ஐலண்ட் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையில், தமிழ் ஈழ விடுதலை புலிகள் தோல்வியடைந்த பின்னர் ஹூல் இலங்கைக்குத் திரும்ப விரும்பியதாகக் கூறுகிறார், ஹூல் சார்பாக கார்லோ பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் திரும்பி வருவது தொடர்பில் பேசி ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார்.

செப்டம்பர் 2, 2010 அன்று ஹூல் இலங்கைக்குத் திரும்பினார். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த 13 செப்டம்பர் 2010 இல் ஹூலை மீண்டும் பணியில் அமர்த்தினார். ஆனால் நிர்வாக சிக்கல் மற்றும் தாமதங்கள் காரணமாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை.

ஈபிடிபி தலைவருக்கு எதிராக ஹூல் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பில் பொலிஸில் புகார் ஒன்றை இராணுவத்தினர் மேற்கொண்டனர். ஆகஸ்ட் 2011 இல் ஹூல் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். ஆனால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் ஒரு சட்டத்தரணியை அனுப்பிவைத்தார்.

ஹூல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று அஞ்சி ஹூல் இரண்டாவது முறையாக நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஹூலின் வருகையை யார் கோரினர் என்பது சுவாரஸ்யமானது, இதன் விளைவாக தேர்தல் ஆணைக்குழுவில் இவர் அமர்த்தப்பட்டார்.

பொது மக்களிடமிருந்து ஹூலுக்கான சில கேள்விகள்:

  • நீங்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர் இல்லையா? அப்படியானால், நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாடு பற்றி தற்பெருமை கொள்ளும் நீங்கள் இரட்டை குடியுரிமை கொண்டவராக இருந்து கொண்டு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினராக இருப்பதை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?
  • உயர் அதிகாரிகளை பகிரங்கமாக கேவலப்படுத்த, நீங்கள் சமூக ஊடகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?
  • 3 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினராக இருக்கும் வேளையில் – நீங்கள் மூடிய அறைக்குள் பேசி முடிவு எடுத்த பின்னர், பொதுவான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் – நீங்கள் தவறு கண்டுபிடிக்கவோ அல்லது ஆணைக்குழு முடிவுகளுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவோ கூடாது – உங்களால் அந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், ஏன் கெளரவமாக ராஜினாமா செய்து ஆணைக்குழுவை விட்டு வெளியேறக்கூடாது!
  • நீங்கள் அரசியலமைப்பை மீறுகிறீர்கள் – கட்டுரை 103 (9) இன் கீழ், ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பொது ஊழியர்களாகக் கருதப்படுவார்கள். எனவே, ஒரு பொது ஊழியருக்கு மற்றொரு அரசு ஊழியரை பொதுவில் குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை!
  • வெறுக்கத்தக்க பேச்சுக்கு மன்னிப்பு கோருங்கள் – நீங்கள் நபர்களை பொதுவில் துன்புறுத்துவதோடு, எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுவில் அவர்களை அவதூறு செய்கிறீர்கள்.
  • நீங்கள் பக்கச்சார்பானவர் – உங்களை நியமித்த அரசாங்கத்திற்கு ஆதரவாக பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் பொது அலுவலகத்தில் பணியாற்றும் போது வழக்கு தாக்கல் செய்வதன் மூலம் பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியை சவால் செய்ய முயன்றீர்கள்.
  • நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? – அரசியலமைப்புச் செயல்கள் மற்றும் அரசியலமைப்பை மீறும் செயல்கள் குறித்து ஹூலுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால் – இருந்த பிரதமரை நீக்காமல் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, ​​அல்லது தலைமை நீதிபதி மோகன் பீரிஸை பதவியில் இருந்து நீக்கும் போது இதை ஏன் ஆட்சேபிக்கவில்லை?
  • முறிகள் மோசடி கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய வங்கியின் ஆளுநராக ஒரு வெளிநாட்டவரை நியமித்த போது ஹூல் ஏன் கேள்வி எழுப்பவில்லை?

As appeared on Lankaweb. Originally written by Shenali D Waduge.

 

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியம்? : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மேல்  மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்ப்ட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரியவின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா  தொற்றுக்குள்ளான நபர்...

ஸ்பெயினில் பாரிய வெடிப்புச் சம்பவம் : இருவர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் மாட்றிட் நகரில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு கசிவால் ஏற்பட்ட குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பல கட்டடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவத்தினையடுத்து...

நெடுந்தீவில் விபத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் சடலமாக மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் இன்று மாலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார்...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு : ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 389 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 187 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 53 வயதான...

Developed by: SEOGlitz