மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராகம பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி…!

- Advertisement -

(திருத்தம்)

சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முயன்ற கைதியொருவர்  உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹர சிறைச்சாலையில் இன்று அதிகாலை 2.30 முதல் 3 மணி வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக. பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையின்  கைதிகள்  7 பேர்,  சிறைச்சாலை மதில் மீது ஏறி தப்பிக்க முற்பட்ட வேளை, கைதிகளை தப்பிசெல்ல விடாது தடுப்பதற்காக சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, கைதி ஒருவர் மதில் மீது இருந்து விழுந்து காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் : மின்சக்தி அமைச்சு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த ஆண்டில் பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில்,...

உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன்,...

மாவட்டங்களுக்கிடையிலான இரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

வெளிமாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம்அலை ஏற்பட்டதன் காரணமாக அலுவலக ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. எனினும், தற்போது...

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

Developed by: SEOGlitz