மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் மற்றுமொரு செயற்திட்டம் இன்று ஆரம்பம்..!

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாக உள்ளது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட செயற்றிட்டத்தில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளில் இருந்து இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

- Advertisement -

இதன்படி, இரண்டாம் கட்ட செயற்றிட்டத்தில் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

இலங்கை வெளியுறவு அமைச்சு, அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அந்த நாடுகளில் உள்ள இலங்கை சிவில் விமான சேவை அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில், இன்று, நாளை மற்றும்  நாளை மறுதினம் ஆகிய திகதிகளில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானங்கள், பிரித்தானியாவின் மூன்று முக்கிய விமான நிலையங்களின் ஊடாக அந்த நாட்டில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரவுள்ளன.

இதற்கமைய, முதலாவது விமானம் இன்று அதிகாலை 4.40 அளவில் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் நோக்கி புறப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்த விமானம் மூலம் 250 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விமானம் நாளை நள்ளிரவு 12.45 அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு செல்லவுள்ள விசேட விமானம் மூலம் அந்த நாட்டில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

குறித்த விமானம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து காலை 8.15க்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கம்பஹாவில் ஏனைய தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Slovakia யில் அமுல்படுத்தப்படவுள்ள கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள்!

ஐரோப்பிய நாடான Slovakia யில் கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Developed by: SEOGlitz