மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

- Advertisement -

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன் மண்டியிட்டு இருக்கும் காட்சியடங்கிய காணொளி  வௌியிடப்பட்டு இருந்தது.

- Advertisement -

இதையடுத்து அமெரிக்காவின் மின்னொசட்டா நகரில் பாரிய எதிர்ப்புக்கள் கிளம்ப நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கறுப்பின மக்களை அமெரிக்க பொலிஸார் திட்டமிட்டு கொலை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து மூன்று பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் எவரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாற மின்னிபொலிஸ் மற்றும் சென் போல் நகரின் பொலிஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டதுடன் தாக்கி நொறுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

இதையடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த நகரங்களில் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சூறையாடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் துப்பாக்கிச் சூடுகளும்  ஆரம்பிக்கும் என அமைதியின்மை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் வௌியிட்ட டுவிட்டர் பதிவு பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தகக்து.

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...