மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதான கங்கைகளை அண்டிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

- Advertisement -

நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிவருவதன் காரணமாக சில கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள மஞ்சள் அபாய எச்சரிக்கை அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடக்கட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, தெதுரு ஓயாவினை அண்மித்துள்ள, மஹவ, வாரியபொல, நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர, பிங்கிரிய, பல்லம, ஆராச்சிக்கட்டுவ மற்றும் சிலாபம் உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அத்தனகல்லு ஓயாவின், திவுலுப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, கம்பஹா, ஜா – எல்ல, மஹர, கடான மினுவாங்கொட மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களனி கங்கையின் இண்மித்த பிரதேசங்களான ருவான்வெல்ல, தெஹியோவிட்ட, சீதாவாக்க, கடுவெல, பியகம, ஹோமகம, கொலன்னாவ மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுககப்பட்டுள்ளது.

அத்துடன், களுகங்கையை அண்டிய, பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, எலப்பாத்த, கிரியெல்ல, அபேகம, ஹெலியகொட, இங்கிரிய, ஹொரன, கவவான, பாலிந்த நுவர, புலத்சிங்கல, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, மதுராவெல போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க்படப்டுள்ளது.

இதேபோன்று, கின் கங்கையின், நெலுவ, தவலம, நாகொட, எல்பிட்டிய, நியாகம, பத்தேகம, வெலிப்பிட்டிய, திவிதுர, காலி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நில்வளா கங்கையினை அண்மித்த கொடபொல,பிடபெத்தர, அகுரஸ்ஸ, அதுரெலிய, கம்புறுபிட்டிய, திககொட மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபப்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz