திட்டமிட்டப்படி ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்துவதில் சிக்கல் நிலைக்காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களுக்கு இடையே இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றின் நிலைமை சீராகின்றதா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டிருப்பதன் காரணமாக தேர்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தலை நடத்துவதாயின் தற்போதைய நிலைக்கு ஏற்றால் போல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
மேலும், எதிர்வரும் 11 ஆம் திகதி ஆகின்ற போது தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள கூடியதாக இருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று நீதிமன்றில் தேர்தல் தொடர்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பு இலக்கங்கள் வழங்கப்படுவதற்கான நிலைப்பாடும் தற்போது இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் தேர்தலை நடத்துவதற்கான நிலைமை தற்போது இல்லை என்பதையே, தேர்தல் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.