போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் வகையில் தனியான மையமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுகின்றனர்.
போதைபொருள் பாவனைக்காரணமாக கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக கொரோனா தொற்று ஏற்படும் அபாய லயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறான போதைபொருளுக்கு அடிமையான நபர்கள் அதிகம் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் ஹெரோய்ன் உள்ளிட்ட போதைபொருட்களுக்கு அடிமையான 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடிப்படையாக கொண்டு போதைபொருளுக்கு அடிமையான நபர்களை கண்டறிந்து, அவர்களின் விபரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.