நாட்டில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்டப்டு.ள்ளது.
தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனம் சற்று முன்னர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின், பத்தேகம, அக்மிமன, எல்பிட்டிய, நியகம மற்றும் பொத்தல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்காளவிரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் வளிமண்டள தாழமுக்கமானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலையானது நாளைய தினம் முதல் தென் வங்காள விரிகுடாவின் கடற்பிரதேசத்தில் சூறாவளியாக வலுவடையும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை உருவாகும் இந்த சூறாவளிக்கு அம்பான் சூறாவளி என பெயரிடப்பட்டுள்ளதாக தாய்வான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த அம்பான் சூறாவளி அடுத்துவரும் நாட்களில் வங்காளவிரி குடாவின் வடக்கு திசையில் பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
மேலும், காற்றின் வேகமானது 60 முதல்70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும், இதன்போது கடல் சற்று கொந்தளிப்பாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டும் அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்ட ஊடாக பொத்துவில் வரையிலான கடற் பிரதேசங்களில் கடலையானது உயர்வடைந்து காணப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் கடலலை நிலபரப்பிற்குள் ஊடுறுவும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவேளை, எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் பல இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று இரவு வேளைகளில் தெற்கு,மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களில் 200மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஏனையமாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும், குறிப்பாக, கிழக்குமற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது.
அத்துடன், தெற்கு, மேல், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் நாளைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிபதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளைய தினமும், மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால், மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்சரிவு, மண்மேடுசரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும், அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று மாலை வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் சிறிகந்துர மற்றும் ஹெகொட ஆகியபிரதேசங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சிறிகந்துரபிரதேசத்தில் 182.5மில்லி மீற்றரும், ஹெகொட பிரதேசத்தில் 154.0 மில்லி மீற்றரும் அளவில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில், மட்டக்குளி பிரதேசத்தில், 112மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், ரத்மலானயில் 103.5 மில்லி மீற்றர்மழைவீழ்ச்சியும், கெஸ்பேவ பிரதேசத்தில், 86 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அளவிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஹிமிதும பிரதேசத்தில், மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.