மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் மீண்டும் ஊரடங்கு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு..!

- Advertisement -

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இவ்வாறு, நாட்டின் 23 மாவட்டங்களில் இன்று அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் திங்கட் கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

எனினும், 23 மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 23 ஆம் திகதிவரை வழமையான நடைமுறையில், ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது,

இதற்கமைய 18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 08 மணிக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மீள அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகி ய மாவட்டங்களில் கடந்த 11 ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்படும் மக்களின் அன்றாட வாழ்க்கையினை இயல்பு நிலைமைக்கு கொண்டுவருவதற்கான நடைமுறை இன்று இரவு 08 மணிக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 18 ஆம் திகதி வழமைபோல் அந்த நடைமுறை மீண்டும் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்திருந்த ஊரடங்கு தொடர்பான அறிவுறுத்தல்களில் எவ்வித மாற்றங்களும் இல்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

Developed by: SEOGlitz