மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமற்போன முதியவர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு!

- Advertisement -

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா ஆற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காணாமல்போயிருந்த கொட்டகலை, ரொசிட்டா, கங்கைபுரம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லமுத்து துரைராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

குறித்த முதியவர் காணாமல் போனமை தொடர்பாக அவரின் உறவினர்களால் திம்புள்ள, பத்தன பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த முதியவரைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று மாலை 4.30 மணியளவில் தேடப்பட்ட முதியவரின் சடலம் ரொசிட்டா ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் பிரதேச பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமற்போன முதியவர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு! 1 காணாமற்போன முதியவர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz