மெய்ப்பொருள் காண்பது அறிவு

காவத்தை பிரதேசத்தில் ஆணின் சடலம் மீட்பு!

- Advertisement -

இரத்தினபுரி, காவத்தை பிரதேசத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

காவத்தை பொலிஸ் நிலையத்திற்குற்பட்ட ஓபாத்த, இலக்கம் ஒன்று பிரிவில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தினை மலசலகூட குழியில் இருந்து காவத்தை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

- Advertisement -

ஒப்பாத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மதுரப்பெரும ஆராச்சிலாகே நிசங்க விஜேசிறி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் மலசலகூடம் துர்நாற்றம் விசுவதாக கொலைசெய்யப்பட்டவரின்; மனைவியான ஜயகொடி ஆராச்சிலாகே சுமனா ருவான் குமாரி காவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக காவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதுல பெரேரா தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவத்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நான்கு மாவட்டங்களுக்கு மாத்திரம்  ஊடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மேலும் மூன்று...

அமரர் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் குறித்த முழு விபரம்!

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மலர்ச்சாலையில் இருந்து அவரது...

160 இலங்கைப் பிரஜைகள் மீண்டும் கொரியா நோக்கிப் பயணம்

கொரியாவில் பணிபுரிகின்ற நிலையில், நாடு திரும்பியிருந்த 160 இலங்கைப் பிரஜைகள் மீண்டும் கொரியா நோக்கிப் பயணித்துள்ளனர். இதற்கமைய, மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்துவருவதற்கான புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம்...

நாட்டின் பல பகுதிகளில் 200மி.மீ மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...