மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் – வெளியான தகவல்..!

- Advertisement -

தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முல்லைதீவு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த, கொழும்பு குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -

இதற்கமைய, உயிரிழந்தவர்களின் சடலங்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்ட்டிருந்தது.

கொழும்பு குணசிங்கபுர பகுதியில் வீடுகள் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த பலர் அண்மையில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்

இந்த நிலையில், அந்தக் குழுவைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஏற்கனவே சுகயீனம் காரணமாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சிங்கள ஊடகமொன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

அரசியலமைப்பு  திருத்தத்தில்  சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்  சபாநாயகர்  அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை...

சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்பு!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களை   சவளக்கடை பொலிசார்  மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனையில் குறித்த மதுபானம் கைப்பற்றப்பட்டதாக...

யாழில் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுச்சந்தை வியாபாரிகளின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளது. தமது வியாபார நடவடிக்கையினை புறக்கணித்து, சந்தைக்கு முன்பாக அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது அலுவலக செய்தியாளர்...

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம்! விபரம் உள்ளே..

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட   பதுகம குடியிருப்பு பகுதி   தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. உடன்அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா...

Developed by: SEOGlitz