இத்தாலியின் மிகவும் பழைமையான கால்ப்பந்து கழகங்களுக்கிடையில் நடத்தப்படும் CHERRY A லீக் கால்ப்பந்து தொடரை மீண்டும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் CHERRY A கால்பந்து லீக் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இத்தாலியின் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதற்கமைய, போட்டியை நடாத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், போட்டியை நடாத்தும் போது வீரர்கள் எவருக்கேனும் வைரஸ் தொற்று ஏற்படுமானால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்படும் எனவும் இத்தாலி விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 4ஆம் திகதி முதல் இத்தாலியில் கால்பந்து வீரர்கள் பிரத்தியேக பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இத்தாலியின் கால்பந்து வீரர்கள் அணியாக இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.