கொரொனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மற்றும் தனிநபர்கள் நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கான கால எல்லையை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜீன் மாதம் 15 திகதி வரை குறித்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலஎல்லை எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
நூற்றுக்கு நான்கு வீத வட்டி விகிதத்தின் அடிப்படையில் கடன்சேவை வழங்கப்படவுள்ளது.