பிரித்தானியாவில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரச பரிசோதனை ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜோன் நியூட்டனை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 30 வரையான காலப்பகுதிக்குள் 1 இலட்சத்து 22 ஆயிரத்து 347 கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் பரிசோதனைக் கூடங்களிலும், 40 ஆயிரம் வரையிலான பரிசோதனைகள் பொதுமக்களின் வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.