புதிய பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவால் அமுல்படுத்தப்படவுள்ள புதிய பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராக மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஹொங்கொங் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொங்கொங் நகரின் மத்திய பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றதையடுத்து அவர்களைக் கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவின் புதிய பாதுகாப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் சுலோகங்களைத் தாங்கியவாறு குறித்த பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பிரிவினைவாதம், சதித்திட்டம் தீட்டுதல், தேசத்துரோகம், நாட்டைப் பிளவு படுத்தும் செற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கும் சட்டமொன்றை ஹொங்கொங்கில் நிறைவேற்றுவதற்குச் சீனா நீண்ட காலமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.