மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் 110 கிலோமீற்றரை எட்டும் வாய்ப்பு – கடற்றொழிலாளர்களே மிகவும் எச்சரிக்கை…!

- Advertisement -

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றம் பெற்றுள்ளது.

அம்பன் என அழைக்கப்படும் இந்த சூறாவளி இன்று காலை 8.30 அளவில் உருவெடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணக்கள் அறிவித்துள்ளது.

- Advertisement -

அம்பன் சூறாவளியானது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அம்பன் சூறாவளியானது சக்திவாய்ந்ததாக மாறுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பன் சூறாவளியானது தற்போது நிலைகொண்டுள்ள பகுதியில் இருந்து, இடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு நோக்கி நகருமென எதிர்வு கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி அன்று அம்பன் சூறாவளி தனது திசையை மாற்றி மேற்கு வங்காள கரையை நோக்கி பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

மேலும், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் கடற்பரப்பில் 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும், சில நேரங்களில் 110 கிலோமீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பன் சூறாவளியின் காரணமாக நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிற்கு மேலாக காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் 72 மணித்தியாலங்களில், தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணக்கள் அறிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்துவரும் 24 மணித்தியாளங்களுக்கு நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

மேலும், காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும், இதன்போது கடல் சற்று கொந்தளிப்பாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற் பிரதேசங்களில் இடைக்கிடையே காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் கடலலை 2 அல்லது 2.5 மீற்றருக்கு உயர்வடைந்து இருக்குமெனவும், இதனால் கடலலை நிலபரப்பிற்குள் ஊடுறுவும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கல்கிஸ்ஸையில் போதப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் இருவர் கைது!

கல்கிஸ்ஸை – கொத்தலாவலபுர பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து ஆயிரம் போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடைய...

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள விசேட கோரிக்கை..!

நாட்டில் வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளதன் காரணமாக, நூற்றுக்கு 70 வீதமான வாகன விற்பனை நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விற்பனையாளர்கள் பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள்...

சைப்ரஸிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா?

சைப்ரஸ் நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட பணியாளர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம்  சைப்ரஸ் நாட்டில் இருந்து 45 பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 644 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 14 விமான சேவைகளின் ஊடாக ஆயிரத்து 122 பேர் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தென்கொரியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ளனர். அத்துடன்,...

குப்பைகளை கொண்டு மின்சக்தி தயாரிக்கும் விசேட திட்டம்!

உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக நாள்தோரும் சேகரிக்கபடும், குப்பைகளை கொண்டு மின்சக்தி தயாரிக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, எரியூட்டக்கூடிய குப்பைகளை பயன்படுத்தி இந்த திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்க்பட்டுள்ளதாக மேல்மாகாண கழிவு மேலான்மை அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பு...

Developed by: SEOGlitz