அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.
அமெரிக்காவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 28 ஆயிரத்து 400 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 59 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினத்தில் மாத்திரம் ஆயிரத்து 638 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிரித்தானியாவில் நேற்றைய தினத்தில் 621 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 131 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், பிரித்தானியாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 806 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 82 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இத்தாலியில் நேற்றைய தினத்தில் தொற்றுக்கு உள்ளாகி 474 பேர் உயிரிழந்துள்ளதோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 710 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் ஆயிரத்து 900 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 9 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று, ஸ்பெய்னில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 588 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 45 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினத்தில் மாத்திரம் ஆயிரத்து 276 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 100 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 442 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 699 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று, கனடாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 175 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதுடன், கனடாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆயிரத்து 653 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 714 ஆக அதிகத்திதுள்ளது.
இவற்றினை அடிப்படையாக கொண்டு சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 இலட்சத்து 79 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலடத்து 44 ஆயிரத்து 581 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, சர்வதேச ரீதியில் 11 இலட்சத்து 8 ஆயிரத்து 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.