மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவிற்கான விசா நடைமுறைகளில் திருத்தம்!

- Advertisement -

அமெரிக்காவிற்கான விசா நடைமுறைகளில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான புதிய சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எச்1 பி’ மற்றும் ‘எல் 1’ போன்ற விசாக்களில் திருத்தம் கொண்டு வரும் நோக்கிலேயே குறித்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினைச் சேர்ந்தவர்களுக்கு ‘எச்1 பி’ வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ‘எச்1 பி’விசாக்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் குறித்த விசா நடைமுறைகளில் கடும் தீவிரப்போக்கினைக் கடைப்பிடித்தார்.

இந்த நிலையில் ‘எச்1 பி’ மற்றும் ‘எல் 1’ விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் புதிய சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அமெரிக்காவிலேயே கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு, ‘எச்1 பி’ விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பின் பின்னர் சட்டமாக்கப்படும் பட்சத்தில், அமெரிக்காவில் கல்வி பயிலும் திறமையான மாணவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு மேற்படி சட்டமூலம் இடமளிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

மண் சரிவு அபாயம் – விசேட எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 09 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன்படி, இந்த எச்சரிக்கை நாளை மாலை 6.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட...

Developed by: SEOGlitz