மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் பரிசீலனை…!

- Advertisement -

பாடசாலைகளை கூடுமான விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், பாடசாலைகள் திறக்கப்படும் போது முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது எனவும் நடத்தப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அல்லது பாடத்திட்டத்தின் அடிப்படையில் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் எனவும் தெரிவித்த அவர், இறுதி முடிவு குறித்து கல்வி அமைச்சு விரைவில் அறிவிக்கும் எனவும்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மேலும் குறிப்பிட்டார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரேஸிலில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக சீன தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானம்!

பிரேஸிலில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான தேசிய நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சீன தடுப்பூசியை பயன்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட...

கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 186 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று...

20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பணம்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க்ப்பட்டுள்ளது. இதன்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

விசேட தேவைகளுக்காக அழைப்பு விடுக்கபட்டால் மாத்திரம் சேவை பெறுநர்களை அலுவலகத்திற்கு வருகை தருமாறு அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமது கோரிக்கைகள்...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்!

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே...

Developed by: SEOGlitz